Credit Card Use Pannurathu Eppadi? | Credit Card Tips in Tamil (2026 Guide)

credit card tips in tamil, how to use credit card tamil, credit card interest, billing cycle, avoid mistakes and use credit card smartly

 



Credit Card Use Pannurathu Eppadi?      

  வணக்கம் நண்பர்களே! Credit Card Use Pannurathu Eppadi? எப்படி என்று பார்க்கலாம். இன்று நம் கையில் இருக்கும் அந்தச் சிறிய பிளாஸ்டிக் கார்டு - கிரெடிட் கார்டு. இது அவசர காலத்தில் உதவும் ஒரு வரமா அல்லது நம்மைத் தூக்கமில்லாமல் செய்யும் சாபமா? வாங்க "உயர்வு பாதை " பாணியில் Credit Card Tips in Tamil (2026 Guide) எளிமையாகப் பார்ப்போம்.

1.  கிரெடிட் கார்டு என்றால் என்ன? | What is a Credit Card? 

    கிரெடிட் கார்டு என்பது வங்கி நமக்குத் தரும் ஒரு 'முன்பண வசதி'. நம்மிடம் பணம் இல்லாதபோதும், வங்கியிடம் நாம் தேவைகளுக்காக கடன் வாங்கிச் செலவு செய்துவிட்டு, பிறகு வங்கி சொல்லும் அந்த நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் முறை ஆகும்.

2. நன்மைகள்: ஏன் இது ஒரு வரம்? | The Boons: Why it’s a 'Varam'? 

    Emergency Help (அவசர உதவி): கையில் காசு இல்லாத நள்ளிரவு நேரத்திலோ அல்லது மருத்துவ அவசரத்திலோ இது ஒரு உற்ற நண்பன் ஆக இருக்கும்.

    Rewards & Cashback (சலுகைகள்): நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பாயிண்ட்ஸ்கள் அல்லது கேஷ்பேக் கிடைக்கும்.

    Credit Score (சிபில் ஸ்கோர்): சரியாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயரும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு வீடு அல்லது கார் வாங்கப் பெரிய லோன் கிடைக்க வழிசெய்யும்.

3. தீமைகள்: ஏன் இது ஒரு சாபம்? | The Curses: Why it’s a 'Saabam'?

    Debt Trap (கடன் வலை): "கையில் கார்டு இருக்கிறதே" என்று தேவையில்லாத பொருட்களை வாங்கினால், வட்டி மேல் வட்டி ஏறி உங்களை நிலைகுலையச் செய்துவிடும்.

    High Interest (அதிக வட்டி): குறித்த தேதியில் பணத்தைக் கட்டத் தவறினால், வங்கிகள் 30% முதல் 40% வரை வட்டி வசூலிக்கும். இது மற்ற கடன்களை விட மிக அதிகம்.

Credit Card Tips in Tamil 2026

    Hidden Charges (மறைமுகக் கட்டணங்கள்):வருடாந்திரக் கட்டணம், தாமதக் கட்டணம் எனப் பல மறைமுகச் கட்டணங்கள் இதில் ஒளிந்துள்ளன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

4.  (புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது எப்படி?) | Smart Tips to Use

    Full Payment: எப்போதுமே 'Minimum Due' மட்டும் கட்டாதீர்கள். முழுத் தொகையையும் (Total Amount) கட்டுங்கள்.

    45 Days Rule: வட்டி இல்லாத நாட்களைச் சரியாகப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குங்கள்.

    Needs vs Wants: "தேவை" (Need) இருந்தால் மட்டுமே கார்டைப் பயன்படுத்துங்கள், "ஆசைக்காக" (Want) அல்ல. தேவை இல்லாத பொது அதை பயன் படுத்த வேண்டாம்.

5. Conclusion (முடிவுரை)

    சுருக்கமாகச் சொல்ல போனால் , கிரெடிட் கார்டு என்பது ஒரு 'கூர்மையான கத்தி'. காய்கறி நறுக்கப் பயன்படுத்தினால் அது பயனுள்ள கருவியாக தெரியும், அதுவே தவறாகக் பயன்படுத்தினால் கைக்கே ஆபத்து உண்டாகும்.

     உங்கள் வரவு செலவைத் திட்டமிட்டுச் செய்தால் கிரெடிட் கார்டு என்றும் உங்களுக்கு ஒரு வரமே!

🔥 Related Posts

❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Credit card என்ன?
Credit card என்பது bank கொடுக்கும் card. இதை பயன்படுத்தி purchase செய்யலாம்.

Credit card safe ஆ?
சரியான usage இருந்தால் safe தான்.

Interest எவ்வளவு வரும்?
பொதுவாக 30% முதல் 40% வரை interest இருக்கும். 

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் 👍 comment பண்ணி சொல்லுங்க.